06 சுதந்திரம் காப்போம்
பிழைக்க வந்தவன்
உழைத்த நம்மில்
ஒற்றுமையின்மை யுணர்ந்து
கற்று தந்தான் பாடம்
அடிமை சங்கிலி
அணிவித்து
உண்மை உள்ளத்தை
உறுத்த வீறு
கொண்டெழுந்தோரின்
உயிர் பறித்தான்
துயர் நிறைந்த
பாரதப் புதல்வர்கள்
புற்றீசலாய் புறப்பட்டனர்
உறக்கம் மறந்து
உணவு மறந்து
உயிர் துறந்து
உயிர் கொடுத்தனர்
சுதந்திரத்துக்கு
ஆனால்
உண்மை நிலை
தினசரிகளில்
தலைப்புச் செய்தி
வரலாறு காணாத பாதுகாப்பு
சுதந்திர தினத்தை
சுதந்திரமாய் கொண்டாட
இயலாத நிலை
இன்று
தீவிரவாதமும்
பயங்கரவாதமும்
“மத” வாதமும்
இளம்பிள்ளை வாதமாய்
இன்னும் தொடர்கின்றது
பெற்ற சுதந்திரத்தை
பேனிக் காப்பது
நம் கடமை
உணர்வீர் தோழரே
புறப்படுவீர் புத்துணர்வோடு
வாதங்கள் களைத்தெறிந்து
புதிய உலகு
படைத்திட