03 பெற்றவரை பேணி் காத்திடுவோம்
முதிர்ந்துப்போன இலைகள்
உதிர்ந்துப் போனதறிவோம் – ஆனால்
உதிர்ந்துப்போன இலைகள்தாம்
உதித்திருக்கும் இளந்தளிர்களுக்கு
உரமாய் இருப்பதென்பதை
உணர்ந்தவர் யவரோ?
கனிந்திருந்த மேகங்கள்
கலைந்துப் போனதறிவோம் – ஆனால்
கலைந்துப்போன மேகங்கள்தாம்
மழையாய் பொழிந்த துளிகளுக்கு
அடிப்படையாய் இருந்ததென்பதை
அறிந்தோர் யவரோ?
காலம் கடந்த சிப்பிகள்
சிதறிக் கிடப்பதறிவோம் -ஆனால்
சிதறிக்கிடக்கும் சிப்பிகள்தாம்
விலைமிகுந்த முத்துக்களுக்கு
வீடாய் இருந்ததென்பதை
விளிந்தவர் யவரோ?
வாடிவிழுந்த வண்ணமலர்கள்
காற்றினில் பறப்பதறிவோம் – ஆனால்
காற்றினில் பறந்தமலர்கள்தாம்
தேன்சுவைநிறைந்த கனிகளுக்கு
அன்னையா யிருந்ததை
சொன்னோர் யவரோ?
வயதுநிறைந்த பெற்றோர்
வலுவிழந்திருப்ப தறிவோம் — ஆனால்
வலுவிழந்தப் பெற்றோர்தாம்
வலிமை நிறைந்த
நம் வாழ்க்கைக்கு
ஒளிவிளக்கு யென்பதை
உணர்வீரே தோழர்களே…
தலை கலைந்து
தேகம் சுருங்கி
கலங்கிய கண்ணோடு
கையேந்தும் முதியோர்யில்லா
வையகம் படைத்திட
உறுதி கொள்ளுவோம்
பெற்றவரை பேணி் காத்திடுவோம்
Kousik Sankaran said,
November 25, 2008 at 8:49 am
Its penni (vallinam) not peni
Keep going…! Superb !