10 எல்லைச் சண்டை

வயலோர வரப்புச் சண்டை
வர்ணித்தன தினசரிகள்
படிக்காத பாமரன்களுக்கிடையே
பங்காளிச் சண்டையென்று

நாட்டின் எல்லைச் சண்டை
நயம்படச் சொல்லின தினசரிகள்
தேசப்பற்றென்று…
எது சரி?
புரிந்தும் புரியாமலும்
நோக்கினேன் சுவற்றை
புன்சிரிப்போடு புத்தர்……..

1 Comment

  1. கார்த்திக் said,

    அனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் கவிதை எழுதினால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்….

Post a Comment