07 தேடுகின்றேன் கிடைக்கவில்லை
வெள்ளி மீண்
முளைச்சிடுச்சு
கிழக்கும் வெளுத்துடுச்சு
இன்னும் என்னத் தூக்கம்
எந்திரிலே
காலை சொப்பத்தைக்
கலைக்கும் தாத்தாவின்
தடினமான குரல்…
காலையில் சாணம்
வழித்தால்தான்டா
படிப்பு மண்டையிலேறும்
பாட்டியின் அதிகாலை
பாட்டு…
அதிகாலைப் பனித் துளிகள்
உடலை நனைக்க
வாசம் நிறைந்த
மல்லிகை மொட்டுக்களை
பறித்த பரவசமான
காலை வேலைகள்…
தென்றலின் தாலாட்டில்
மென்மையாய் வளைந்தாடும்
சூழ் கொண்ட
நெற் பயிற்களிடையே
மார்கழி மாதத்து
மாம்பிஞ்சுகளைப் பொறுக்க
தோழர்களோடு போட்டியிட்ட
பொன்னான காலங்கள்…
பாறைகளிடையே
சலசலத்து சங்கீதம் பாடிய
நீரோடையின் நீண்டப்
பயணத்தில் பரந்துக்கிடந்த
பசுமைவெளியில்
பசுக்களை மேயவிட்டு
பட்டாம் பூச்சிகளின்
பின்னால் அலைந்த காலங்கள்…
எருமையை குதிரையாய்
என்னைப் பிருத்திவியாய்
எண்ணி ஓடியப்போது
எறுமையின் மேலிருந்து
விழுந்து மண்டையை
உடைத்துக்கொண்டழுத
உவர்ப்பான தினங்கள்…
பச்சைக் குதிரை
தாண்டும்போது
சட்டென்று எழுந்துவிட்ட
சகத் தோழனின் சிரத்தில்
பல் பதிய..
ஆசிரியையிடம்
அடிவாங்கும் முன்பே
அழுது தப்பித்த
அழியாக் காலங்கள்………..
புவியியல் பாடவேளையில்
புங்க மரத்தடியில்
பூமத்திய ரேகையைத்தேடி
ஆசிரியரிடம் அடிவாங்கி
ஏன் அவர் என்னைப்
புரிந்துக் கொள்ளவில்லை
என்றெண்ணிய
ஏக்கமான காலங்கள்……..
மேனிலைப் படிக்கும் போது
தென்பெண்ணையாற்று
வெள்ளக் கரங்களில்
சிக்கி – சிதறுமுன்
தப்பித்துக் கரைச் சேர்ந்த
தைரியமான நாடகள்………
பள்ளித் தோழர்களின்
பாசமான அரவணைப்பில்
நாள்தோறும்
நகைச்சுவையாய்
பேசி திரிந்தக் காலங்கள்…………
அனைத்தையும்
தேடுகின்றேன் கிடைக்கவில்லை…..
Ratheesh Viswanathan said,
March 15, 2007 at 9:15 am
Dear Govind,
Thanks for your Autograph.
Regards,
Ratheesh.V.S.
Kannamani said,
September 15, 2008 at 9:03 pm
neenka mattuma thedareenka nanaum then,in enka kedakka pokuthu?