14. முரண்பாடு

மூவண்ணக் கட்சிக் கொடிகள்
மூவாயிரத்தையும்
மூன்று மணி நேரத்தில் கட்டி
முடித்து வீடு திரும்பிய போது

அம்மணத்தோ டோடிவந்து
காலைக் கட்டிக் கொண்டான்
ஐந்து வயதுப் பிள்ளை

Post a Comment